தேசியம்
செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை மறுத்த Ontario முதல்வர்

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என்ற கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை Ontario முதல்வர் Doug Ford மறுத்துள்ளார்.

இதில் எவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டம் குறித்த முடிவு சில கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது என கடந்த புதன்கிழமை (09) வெளியான அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Greenbelt மேம்பாட்டுத் திட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சுற்றுச்சூழல், விவசாயம், நிதி தாக்கங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியுள்ளது எனவும் Bonnie Lysyk தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

Ontario அரசாங்கத்தின் வீட்டு திட்ட இலக்குகளை அடைய கிரீன் Greenbelt திட்டதில் இருந்து நிலத்தை அகற்ற வேண்டும் என்ற கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு சட்டமன்ற அமர்வுகளை உடனடியாக மீள திரும்ப அழைக்க வேண்டும் என Ontario மாகாண உத்தியோகபூர்வ எதிர்கட்சி வெள்ளிக்கிழமை (11) அனுப்பிய கடிதத்தில் கோரியது.

Related posts

மீண்டும் உயரும் பாலின் விலை

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment