கனடாவின் மிகப்பெரிய உரிமை கோரப்படாத அதிஷ்டலாப சீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
70 மில்லியன் டொலருக்கான Lotto Max அதிஷ்டலாப சீட்டின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்படவில்லை.
வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் OLG இதனை அறிவித்தது
2,700 பேர் வரை இந்த அதிஷ்டலாப சீட்டின் உரிமையாளராக தம்மை அடையாளபடுத்தி பரிசைப் பெற முன்வந்தனர்.
ஆனாலும் அவர்களில் எவரும் ல் உண்மையான உரிமையாளர் அல்ல என OLG கூறியது.
இந்த அதிஷ்டலாப சீட்டு Scarboroughவில் June 28, 2022 அன்று கொள்வனவு செய்யப்பட்டது
கடந்த மாதம் அதன் ஒரு வருட காலத்தை எட்டிய நிலையில் அந்த அதிஷ்டலாப சீட்டு காலாவதியானது.