Montreal நகரில் நிகழ்ந்த இரட்டைக் கொலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
தென்மேற்கு Montrealலில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை (27) அதிகாலை இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
56 வயதான தாய் அவரது 12 வயது மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக Montreal காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பதை கண்டறிய தடயவியல் ஆய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஒரு முக்கிய சாட்சியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.