மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் ஒன்று புதன்கிழமை (26) நிகழும் என தெரியவருகியது.
பிரதமர் Justin Trudeau தன்கிழமை ஒரு அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கவுள்ளார்.
இதில் அநேகமாக அனைத்து அமைச்சு பதவிக்கும் புதியவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லது ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு புதிய அமைச்சு பதவி வழங்கப்படும்.
ஏழு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, நீதி அமைச்சர் David Lametti, கருவூல வாரிய தலைவர் Mona Fortier ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலகுகின்றனர் என தெரியவருகிறது.
போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, மீன்வளம், கடல்சார் அமைச்சர் Joyce Murray, பொது சேவைகள், கொள்முதல் அமைச்சர் Helena Jaczek, மனநலத்துறை அமைச்சர் Carolyn Bennett ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்ததுள்ளனர்.
இதனால் இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.
நான்கு அமைச்சர்களும் தொடர்ந்தும் தமது பதிவிகளை பெறவுள்ளனர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne, வெளியுறவு அமைச்சர் Melanie Joly, சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault ஆகியோர் தொடர்ந்தும் தமது அமைச்சு பதிவிகளை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், கருவூல வாரிய தலைமை பொறுப்பை பெறவுள்ளார்.
Bill Blair புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றம் காரணமான பதிவி பிரமாணம் புதன்கிழமை ஆளுநர் நாயகத்தின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெறுகிறது.
2021 இலையுதிர் காலத்தின் பின்னர் நிகழவுள்ள பெரிய அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.