கனடிய வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்தது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (07) இந்த தகவலை வெளியிட்டது.
புதிதாக 60 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட போதிலும் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.
புதிய தொழில் வாய்ப்புகளில் அநேகமானவை முழுநேர தொழில் வாய்ப்புகள் என தெரியவருகிறது.
கனடிய மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரிக்கிறது.
June மாதத்தில் வேலையற்றோர் விகிதம் தொடர்ந்து இரண்டாவது மாதம் அதிகரித்துள்ளது
கடந்த மாதம் ஊதிய அதிகரிப்பு 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் வட்டி விகித உயர்வை கனடிய மத்திய வங்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.