February 22, 2025
தேசியம்
செய்திகள்

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

சிரியாவின் ISIS முகாமில் இருந்து Edmonton நகரை சேர்ந்த குடும்பம் ஒன்று கனடா திரும்புகிறது.

சிரியாவில் கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களுக்கான சிறை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு Edmonton பெண்கள் வியாழக்கிழமை (06) கனடா திரும்புகின்றனர்.

இவர்களின் விடுதலையை கனடிய அரசாங்கம் உறுதி செய்தது.

இந்த பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கனடா திரும்பும் விமானத்தில் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவர்கள் எப்போது அல்லது எங்கு கனடாவில் தரை இறங்குவார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

அதேவேளை இந்த பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்களா என்பது குறித்த விபரங்களும் வெளியாகவில்லை.

Related posts

அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்கள் COVID தொற்றுடன் சேவையாற்ற Quebecகில் அனுமதி

Lankathas Pathmanathan

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment