தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுக்கிறது?

கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுப்பதாக பிரதமர் குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்த முடிவை அறிவிக்க முடியும் என நம்புவதாக Justin Trudeau புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த செயல்முறையை Conservative கட்சி முடக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விசாரணையின் கட்டமைப்பில் அனைத்து கட்சிகளின் உடன்பாடு அவசியம் என பிரதமர் தெரிவித்தார்.

தவிரவும் இந்த விசாரணையை யார் வழிநடத்த பொருத்தமானவர் என்பதிலும் அனைத்து கட்சிகளின் உடன்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.

ஆனாலும் இந்த விசாரணை தொடரும் என பிரதமர் உறுதிப்படுத்திய பின்னரே இந்த விடயத்தில் தனது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறியுள்ளார்.

Related posts

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment