ஏறக்குறைய 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் வார இறுதியில் தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.
கடந்த சனிக்கிழமை (01) முதல் திங்கட்கிழமை (03) வரை கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளிலும் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை தாமதங்களை எதிர்கொண்டன – அல்லது இரத்து செய்யப்பட்டன.
தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டாலும் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை என Air கனடா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நாளாந்தம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தமது விமான சேவையை உபயோகிப்பதாக Air கனடா தெரிவித்தது.