December 12, 2024
தேசியம்
செய்திகள்

Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம்

Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் 24 வயதான முன்னாள் மாணவர் மீது பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

கைதானவர் Geovanny Villalba-Aleman என அடையாளம் காணப்பட்டார்.

Waterloo பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வு வகுப்பின் போது மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் புதன்கிழமை (28) நிகழ்ந்தது.

இதில் 38 வயதான பேராசிரியர், 20, 19 வயதான இரண்டு மாணவர்கள் கத்தி குத்துக்கு இலக்கானார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாலின வெளிப்பாடு, அடையாளம் தொடர்பான வெறுப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட தாக்குதல் இது என புலனாய்வாளர்கள் நம்புவதாக Waterloo பிராந்திய காவல்துறைத் தலைவர் Mark Crowell கூறினார்.

LGBTQ+ சமூகம், இதில் இலக்கு வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாலியல் நோக்கு நிலைக்காக மக்களை குறிவைக்கும் வெறுப்புக் குற்றங்கள் நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது.

2016 இல் 176 ஆக இருந்த இதுபோன்ற சம்பவங்கள், 2021இல் 423 ஆக அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் கூறுகிறது.

Related posts

வாகனம் மோதியதில் தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment