ரஷ்யாவில் வார இறுதியில் ஏற்பட்ட குறுகிய கால எழுச்சியின் சாத்தியமான விளைவுகள் குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார்.
ரஷ்யாவில் வார இறுதியில் ஏற்பட்ட இந்த எழுச்சி உக்ரேன் போரில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்தார்.
ரஷ்யாவின் கிளர்ச்சி உக்ரைனை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஊகங்களுக்கு பிரதமர் இடம் கொடுக்க மறுத்தார்.
Nordic தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டின் Justin Trudeau ஒரு விருந்தினராக கலந்து கொள்கின்றார்.
இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்காக பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (25) ஐஸ்லாந்தை சென்றடைந்தார்.
Arctic பாதுகாப்பு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவை இந்த மாநாட்டில் முதலிடம் வகிக்கின்றன.