February 22, 2025
தேசியம்
செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்ட தமிழர் வீடு திரும்பினார்!

கடந்த திங்கட்கிழமை (19) முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்பட்டு வந்த தமிழர் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.

43 வயதான திவாகர் பரம்சோதி என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (20) அறிவித்தனர்.

Vaughan நகரை சேர்ந்த இவர், இறுதியாக கடந்த திங்கள் மாலை 6 மணியளவில் தனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்.

அதன் பின்னர் குடும்பத்தினர், காவல்துறையினர் அவரை தொடர்புகொள்ள முன்னெடுத்த முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.

இந்த நிலையில் இவர் Nigara Falls பகுதியில் இருக்கலாம் என வெள்ளிக்கிழமை (23) காவல்துறையினர் தகவல் வெளியிட்டனர்.

இவரது நலன் குறித்து கவலை வெளியிட்ட காவல்துறையினர் இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு மீண்டும் காவல்துறையினர் கோரியிருந்தனர்.

இவர் வெள்ளி மாலை பாதுகாப்பாக வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

Lankathas Pathmanathan

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Leave a Comment