February 23, 2025
தேசியம்
செய்திகள்

பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு

புதிய carbon வரி தொடர்பாக பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பு அடங்கிய கோரிக்கையை அவர்கள் Justin Trudeauவுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய carbon வரி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரி Atlantic கனடியர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முதல்வர்கள் கவலை தெரிவித்தனர்.

மத்திய அரசின் புதிய carbon வரி எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Atlantic பிராந்தியத்தில் ஏற்படும் பாதிப்பைத் தணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை இந்த வரியை அமல்படுத்துவதில் இடைநிறுத்தம் வேண்டும் என முதல்வர்கள் கோரியுள்ளனர்.

Related posts

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகள் பிரிக்கப்பட மாட்டார்கள் – இரண்டு கனேடிய விமான நிலையங்கள் முடிவு

Gaya Raja

Leave a Comment