தேசியம்
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்த இரண்டு கனடிய விமானப்படையினர் உடல்கள் மீட்பு

உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

செவ்வாய்கிழமை (20) மாலை Ottawa ஆற்றில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு உறுப்பினர்களின் இழப்பிற்காக வருந்துகிறோம் என பாதுகாப்பு பணியாளர்கள் தலைவர் Gen. Wayne Eyre ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CH-147 Chinook உலங்குவானூர்தி பயிற்சிப் பயணத்தின் போது தண்ணீரில் விழுந்து நொறுங்கியதை தேசிய பாதுகாப்புத் துறை புதனன்று உறுதிப்படுத்தியது.

விபத்தின் போது உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பேர் கொண்ட மொத்தக் குழுவினரில் பலியான பணியாளர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்கள் அவசர உதவி பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு Pembroke மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறு காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் தமது இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து Royal கனடிய விமானப்படையின் விமான பாதுகாப்பு இயக்குநரகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்புத் துறை கூறுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த உலங்குவானூதிகளை தரையிறக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

Related posts

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan

Conservative தலைவருக்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் நகர்வு?

Lankathas Pathmanathan

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment