ஊனமுற்றோர் நலன்களை அமுல்படுத்துவதற்கான மத்திய அரசின் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலம் C-22 செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் Carla Qualtrough இந்த சட்டமூலத்தை முன்வைத்திருந்தார்.
குறைந்த வருமானம் கொண்ட, உழைக்கும் வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டாட்சி வருமான நிரப்பியை உருவாக்க இந்த சட்டமூலம் முன்மொழிகிறது.
Liberal கட்சியின் தேர்தல் உறுதிமொழியான இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை அண்மைக் காலத்தில் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.