தேசியம்
செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும்?

அடுத்த தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole தெரிவித்தார்.

Durham, Ontario நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சில தினங்களில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார்.

இந்த நிலையில் வார இறுதியில் வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அடுத்த தேர்தலில் வெற்றி பெற, கட்சி மிதமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆட்சி செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதில் வேற்று கருத்துக்கள் உள்ள கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டை அவர் மறுக்கின்றார்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் Conservative கட்சி மக்கள் ஆதரவு வாக்குகள் பெற்றனர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

2021 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து Conservative தலைவர் பதவியில் இருந்து Erin O’Toole ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment