February 23, 2025
தேசியம்
செய்திகள்

Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்புவது குறித்த கேள்விகளை தவிர்க்கும் அமைச்சர்

தொடர் கொலையாளி Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அனுப்புவது குறித்த கேள்விகளை அமைச்சர் Marco Mendicino தவிர்த்தார்.

Paul Bernardo குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றுவதற்கான சிறைத்துறையின் முடிவுக்காக அமைச்சர் Marco Mendicino ஏற்கனவே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Paul Bernardoவை குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றும் கனடியச் சிறைச்சாலை முகவத்தின் முடிவை கனடியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.

கனடியச் சிறைச்சாலை முகவத்தின் ஆணையருடன் உரையாடிய போது இந்த விடயத்தில் கனடியர்களின் அதிருப்தியை வெளியிட்டதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் மீண்டும் Paul Bernardoவை அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்ப கனடியச் சிறைச்சாலை முகவத்திடம் வலியுறுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் தவிர்த்தார்.

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் Marco Mendicino பொய் கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre தொடர்ந்தும் குற்றம் சாட்டுகின்றார்.

இந்த விடயத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.

Related posts

Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

சட்டமன்றத்தை விட்டு வெளியேற மாகாணசபை உறுப்பினரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

அனைத்து மாகாணங்கள், 2 பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment