Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் Olivia Chow, ஞாயிற்றுக்கிழமை (11) தமிழ் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
சுமார் 75 பேர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் Olivia Chow தனது பிரச்சார உறுதிமொழிகளை முன்வைத்தார்.
தவிரவும் கலந்து கொண்டவர்களின் சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
Toronto கல்விச்சபை உறுப்பினர் நீதன் சான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில் கருத்து கணிப்புக்களில் தொடர்ந்தும் Olivia Chow முன்னிலையில் உள்ளார்.
இன்று வெளியான Forum Research கருத்துக்கணிப்பில் Olivia Chow 35 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (08) ஆரம்பமான இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (13) வரை தொடரவுள்ளது.
Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.