Liberal அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்வதாக Conservative தலைவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரவு செலவு திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க உள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற செலவீனம் நாட்டை ஒரு நெருக்கடியின் விளிம்புக்கு கொண்டு செல்வதாக புதன்கிழமை (07) தனது கட்சியினர் மத்தியில் உறையாற்றியபோது அவர் கூறினார்.
பணவீக்கம், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காக வரவு செலவு திட்டத்தை சமநிலைப்படுத்தும் நிதி நடவடிக்கையை முன்வைக்க மத்திய அரசாங்கத்திற்கு Pierre Poilievre மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.