தேசியம்
செய்திகள்

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Winnipeg நகரின் பிரபல சுற்றுலாத் தளத்தில் மரக் கட்டமைப்பில் இருந்து விழுந்த மாணவர்கள் பலர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (31) நிகழ்ந்தது.

Winnipeg நகரின் Fort Gibraltar சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் பாடசாலை சுற்றுலாவின் போது மரக் கட்டமைப்பில் இருந்து நான்கு முதல் ஆறு மீட்டர்கள் வரை விழுந்தனர் என தெரியவருகிறது.

இதில் 16 குழந்தைகள் உட்பட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குழந்தைகள் 10 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.

இந்த குழந்தைகளில் பலர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் காயமடைந்தவர்கள் தமது பாடசாலையின் 5ஆம் ஆண்டு மாணவர்கள் என St. John’s-Ravenscourt பாடசாலை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

Related posts

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment