February 22, 2025
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து தனது கட்சியை சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அனுமதிக்குமாறு பிரதமரிடம் NDP தலைவர் கோரியுள்ளார்

இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை NDP தலைவர் Jagmeet Singh பிரதமர் Justin Trudeauவுக்கு எழுதியுள்ளார்

கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் அறிக்கையின் இரகசிய இணைப்பை மதிப்பாய்வு செய்வதற்கு, பாதுகாப்பு அனுமதிகளை பெற Conservatives, Bloc Québécois தலைவர்கள் மறுத்துள்ளனர்

இந்த நிலையில் பிரதான எதிர் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குமாறு Jagmeet Singh பிரதமருக்கான கடிதத்தில் கோரியுள்ளார்

உளவுத்துறை அறிக்கையை பரிசீலித்த பின்னர் அதில் உள்ள என்ன விடயங்களை பொது வெளியில் வெளியிட முடியும் என்பதற்கான விளக்கத்தையும் Justin Trudeauவிடம் Jagmeet Singh கோரியுள்ளார்

இந்த கடிதத்தை பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

Lankathas Pathmanathan

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Lankathas Pathmanathan

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment