Air Canada விமான நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு வியாழக்கிழமை (25) தள்ளப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த கட்டாயம் Air Canada நிறுவனத்திற்கு ஏற்பட்டது.
விமானத் தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட தற்காலிக தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக பல விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாகின.
வியாழன் மாலை தொழில்நுட்ப சிக்கல் சீர் செய்யப்பட்ட நிலையில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக Air Canada நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.