கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்க உள்ளார்.
வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழு முன் எதிர்வரும் 6ஆம் திகதி அவர் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு David Johnston ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Bardish Chagger வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.
இந்த நிலையில் இதற்காக அவருக்கு மீண்டும் அழைப்பிதழை வழங்க எத்தனிப்பது எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கும் முயற்சி என Liberal கட்சி குற்றம் சாட்டுகிறது.
வெளிநாட்டு தலையீட்டை கவனிக்கும் சிறப்பு அறிக்கையாளராக தனது முதல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை (23) David Johnston வெளியிட்டார்.
அதில் கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக அவர் பரிந்துரைத்திருந்தார்.