COVID தொடர்பான சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவை Nova Scotia மாகாணம் நீக்குகிறது.
செவ்வாய்க்கிழமை (23) மாகாண அரசாங்கம் இந்த முடிவை ஒரு அறிக்கையில் வெளியிட்டது.
கட்டாய தடுப்பூசிகள் உட்பட சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவை Nova Scotia மாகாணம் நீக்குகிறது.
இனிவரும் காலத்தில் ஏனைய சுவாச நோய்களை போலவே COVID தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும் என செவ்வாய்க்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம், March மாதம் 15ஆம் 2020ஆம் ஆண்டு Nova Scotia மாகாணத்தில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.