Saskatchewanனின் மூன்றாவது பெரிய நகரத்தின் காவல்துறைத் தலைவர் பதவி விலகியுள்ளார்.
Prince Albert நகரின் காவல்துறைத் தலைவர் Jonathan Bergen பதவி விலகுவதாக வியாழக்கிழமை (18) அறிவித்தார்.
Prince Albert நகரின் இரண்டு காவல்துறை அதிகாரிகள், கடந்த ஆண்டு இறந்த ஒரு சிறுவனைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என பொது முறைப்பாடுகள் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த சிறுவனின் மரணத்தை தவிர்க்கக்கூடிய சம்பவம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த விசாரணை அறிக்கை வெளியான நிலையில் தனது பதவி விலகலை காவல்துறைத் தலைவர் அறிவித்தார்.