தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவை போற்றுகிறோம் என கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான Conservative கட்சியின் தலைவர், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இலங்கையின் வரலாற்றில் இந்த இருண்ட அத்தியாயத்தின் போது கற்பனை செய்ய முடியாத அட்டூழியங்கள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட, அறிந்த, அறியப்படாத பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் என அவர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என Pierre Poilievre அழைப்பு விடுத்துள்ளார்.