தேசியம்
செய்திகள்

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு Scarborough Rouge Park நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வியாழக்கிழமை (18) நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நாளை நினைவு கூறும் இவ்வேளையில், தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அவர்கள் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம் என அவர் கூறினார்.

Gary

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து செய்யப்பட தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சே உட்பட நான்கு இலங்கை அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்ததை அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட்ட பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கனடா பொறுப்புக்கூறலை தொடர்ந்து வலியுறுத்தும் என கரி ஆனந்தசங்கரி கூறினார்.

Related posts

உடல் செயல்பாடின்மை காரணமாக அதிகரிக்கும் சுகாதார பராமரிப்பு செலவுகள்

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது கனடா புதிய தடைகள்!

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment