வார இறுதியில் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயத்திற்கு Alberta தயாராகிறது.
ஏற்கனவே காட்டுத் தீயால் அழிக்கப்பட்ட மாகாணத்தின் வடக்கு, மத்திய பகுதிகளில் வார இறுதியில் கடுமையான வெப்ப நிலை எதிர்வு கூறப்படுகிறது.
இதனால் புதிய காட்டுத் தீ ஆபத்து மாகாணத்தின் பெரும்பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (12) மாலை வரை மாகாணம் முழுவதும் 74 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.
இவற்றில் 20 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக் கணக்கானோர் மேலும் ஒரு வாரத்திற்கு வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவருகின்றது.
மாகாணம் முழுவதும் வேகமாக பரவும் காட்டுத்தீ காரணமாக Albertaவில் அவசரகால நிலை கடந்த சனிக்கிழமை (06) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.