கனடாவின் பல்வேறு மாகாணங்களில் இந்த வாரம் முழுவதும் மாறுபட்ட வானிலைகள் எதிர்வு கூறப்படுகின்றன.
ஏழு மாகாணங்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வானிலை எச்சரிக்கைகளை திங்கட்கிழமை (08) சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது.
சில மாகாணங்களில் இந்த வாரம் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய சில மாகாணங்கள் காட்டுத்தீயின் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
வேறு சில மாகாணங்களில் கடும் வெள்ள அபாயம் எதிர்வு கூறப்படுகிறது.
கிழக்கு கனடாவில், நாளை காலைக்குள் 15 முதல் 30 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்கும் மேலாக Alberta மாகாணம் முழுவதும் தீ பரவி வருகிறது.
Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.