தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வேட்பாளர்கள் பதிவின் இறுதி வாரம்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்யக்கூடிய இறுதி வாரம் இதுவாகும்.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை மாலை 2 மணிவரை வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்யலாம்.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

திங்கட்கிழமை (08) காலை 8 மணிவரை இந்த இடைத் தேர்தலில் போட்டியிட 73 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது: NACI அறிக்கை

Lankathas Pathmanathan

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

Gaya Raja

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

Leave a Comment