கனடாவின் பொது சேவை கூட்டணியுடன் கனடிய மத்திய அரசின் புதிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்கு 1.3 பில்லியன் டொலர் செலவாக உள்ளது.
கருவூல வாரிய தலைவர் Mona Fortier இந்த தகவலை வெளியிட்டார்.
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் ஒரு பிரிவினர் மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.
120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக பொதுச் சேவை கூட்டணி திங்கட்கிழமை (01) அதிகாலை அறிவித்தது.
இதன் மூலம் கருவூல வாரிய ஊழியர்களுக்கான வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் எட்டப்பட்ட தற்காலிக உடன்பாடு குறித்து கருவூல வாரிய தலைவர் கருத்து தெரிவித்தார்.
ஊழியர்களுக்கான நியாயமான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக Mona Fortier கூறினார்.
இந்த ஒப்பந்தம் 2021 முதல் நான்கு ஆண்டுகளில் 12.6 சதவீத கூட்டு ஊதிய உயர்வை உள்ளடக்குகிறது.
ஆனாலும் நாடளாவிய ரீதியில் 35 ஆயிரம் கனடா வருமான துறை ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்வதாக பொதுச் சேவை கூட்டணி தெரிவித்துள்ளது.