February 22, 2025
தேசியம்
செய்திகள்

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருட காலத்தில் இது போன்ற இணைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் Anita Anand கூறியுள்ளார்.

இந்த இணைய தாக்குதல்களால் கனடாவின் உள்கட்டமைப்பிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என கனடாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆனாலும் இதுபோன்ற சமீபத்திய தாக்குதல்களால் கனடிய அரசாங்க இணையதளங்கள் பாதிக்கப்படவில்லை என தகவல் தொடர்பு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா அல்லது ரஷ்ய சார்பு குழுக்களின் கனடாவுக்கு எதிரான இணைய தாக்குதல்கள். உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவு காரணமாக நிகழ்வதாக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

கனடிய இணையதளங்கள், முக்கிய உள்கட்டமைப்பு வழங்குநர்கள் மீதான இணைய தாக்குதல்கள், உக்ரைன் குறித்த கனடிய மத்திய அரசின் ஆதரவு நிலையில் மாற்றம் எதையும் ஏற்படுத்தாது எனவும் Trudeau கூறினார்.

Related posts

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Gaya Raja

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment