தேசியம்
செய்திகள்

எதிர்காலத்தில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கலாம்?

எதிர்காலத்தில் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்க தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem தெரிவித்தார்.

வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் மேற்கொள்வதில்லை என புதன்கிழமை (12) மத்திய வங்கி அறிவித்தது.

இதன் மூலம் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக தொடரவுள்ளது.

February மாதம் 5.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் 3 சதவீதமாக குறையும் என மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் பணவீக்கத்தை அதன் இலக்கான 2 சதவீதத்திற்கு கொண்டு வர மத்திய வங்கி முயற்சிப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் புதனன்று தெரிவித்தார்.

இருப்பினும், இது சவாலான ஒரு விடயமாக இருக்கும் என மத்திய வங்கி ஒப்புக் கொள்கிறது.

இதற்காக வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.

ஆனாலும் பணவீக்க இலக்கை எட்டுவதற்கு மீண்டுமொரு வட்டி விகித உயர்வு அவசியமா என்பது குறித்து மத்திய வங்கி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

வட்டி விகிதம் குறித்த மத்திய வங்கியின் அடுத்த அறிவிப்பு June மாதம் 7ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் கனடா!

Gaya Raja

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment