December 12, 2024
தேசியம்
செய்திகள்

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ரோமானிய குடும்பத்தினர் கனடாவில் இருந்து நாடு கடத்தல் உத்தரவிலிருந்து தப்பும் முயற்சியில் அமெரிக்கா நோக்கி பயணித்ததாக தெரியவருகிறது.

2018 முதல் இந்த குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குடிவரவு Toronto வழக்கறிஞர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர்கள் March 29 ஆம் திகதி கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டனர் என வழக்கறிஞர் Peter Ivanyi கூறினார்.

Florin Lordache, அவரது மனைவி Monalisa Lordache ஆகியோர் March மாதம் 29ஆம் திகதி Pearson சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

இந்த நிலையில் அவர்கள் கனடாவில் தங்குவதற்கான வேறு சட்டப்பூர்வ வழிகள் எதுவும் இல்லை என கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் அவர்களிடம் கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்

கனடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை திணைக்களம் இந்த இரண்டு ரோமானிய பிரஜைகள், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு விமான பயண சீட்டுக்களை கொள்வனவு செய்ததாக வழக்கறிஞர் Peter Ivanyi கூறினார்

உண்மையில் அவர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்பினர் என தான் நம்பவில்லை எனவும் அவர் கூறினார்

இவர்கள் நான்கு பேர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பத்துடன் இணைந்து கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக RCMP கூறியது.

Related posts

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot மரணம்

இயல்பை விட குளிரான வெப்பநிலைக்கு கனடியர்கள் தயாராக வேண்டும்: Weather Network அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment