Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் திங்கட்கிழமை (03) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது.
வேட்புமனுக்கள் திங்கள் முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன
தேர்தல் வாக்களிப்பபு June மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
Toronto நகர முதல்வர் பதவிற்கு போட்டியிடும் விருப்பத்தை ஏற்கனவே பலர் அறிவித்துள்ளனர்
முதல் நாளான திங்களன்று, முன்னாள் மாகாண கல்வி அமைச்சரும் Liberal சட்டமன்ற உறுப்பினருமான Mitzie Hunter, தற்போதைய நகர சபை உறுப்பினர்கள் Brad Bradford, Josh Matlow, முன்னாள் நகரசபை உறுப்பினர் Ana Bailão, முன்னாள் Toronto காவல்துறை தலைவர் Mark Saunders ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தவிரவும் முன்னாள் Toronto Sun கட்டுரையாளர் Anthony Furey, முன்னாள் நீண்டகால நகர சபை உறுப்பினர் Giorgio Mammoliti, முன்னாள் நகர சபை உறுப்பினர் Rob Davis ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.