சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள் விரைவில் கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
ஆனாலும் அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் தாயார் அவர்களுடன் பயணிக்க மாட்டார் என தெரியவருகிறது.
Quebecகைச் சேர்ந்த தாயாரின் பாதுகாப்பு மதிப்பீட்டில் தாமதம் ஏற்படுவதால் இந்த நிலை தோன்றியுள்ளது.
தனது குழந்தைகளை ஏனைய கனேடியர்களுடன் திருப்பி அனுப்பும் விமானத்தில் பயணிக்க அனுமதிப்பதா அல்லது அவர்களை சிரியாவில் சிறைச்சாலையில் இருக்க அனுமதிப்பதா என்பதை முடிவு செய்ய அவருக்கு திங்கட்கிழமை (03) வரை காலக்கெடு வழங்கப்பட்டது.
இவர்கள் 2018ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறை சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.