தேசியம்
செய்திகள்

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

மீட்கப்பட்ட எட்டுப் பேரும் ருமேனிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் என கனடிய காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்

இதில் பலியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் அடங்கிய குடும்பத்தை இந்திய காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான தந்தை Praveenbhai Chaudhari, 45 வயதான தாய் Dakshaben Chaudhari, 23 வயதான மகள் Vidhi Chaudhari, 20 வயதான மகன் Meet Chaudhari என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பலியான இந்திய வம்சாவளி குடும்பத்தினர்

இவர்கள் சுற்றுலா விசாவில் கனடாவுக்கு வந்ததாக அவர்களது சொந்த மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய காவல்துறையினர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்

கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் கனடாவில் தங்கியிருந்தனர் என இந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த சம்பவத்தில் பலியான ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் Akwesasne அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டனர்.

பலியானவர்கள் 28 வயதான தந்தை Florin Iordache, 20 வயதான தாய் Cristina (Monalisa) Zenaida Iordache, அவர்களின் இரண்டு வயது, ஒரு வயது குழந்தைகள் என சனிக்கிழமை (01) அறிவிக்கப்பட்டது

பலியான ருமேனிய வம்சாவளி குடும்பத்தினர்

இவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவருகிறது.

Related posts

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment