Liberal கட்சியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong வியாழக்கிழமை (23) அறிவித்தார்.
சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து Liberal கட்சியில் இருந்து விலகுவதாக வியாழன்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Liberal கட்சியை விட்டு வெளியேறும் அவர், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படவுள்ளார்.
கனடியர்களான Michael Kovrig, Michael Spavor ஆகியோரின் விடுதலையை சீனா தாமதப்படுத்த வேண்டும் என சீன தூதர் ஒருவருக்கு Han Dong தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
Han Dong, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் உறுதியாக மறுத்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு நபராகவும், எந்த ஒரு கனடியரின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என அவர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
அதேவேளை இந்த ஊடக அறிக்கையின் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என Torontoவில் உள்ள சீன துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.