தேசியம்
செய்திகள்

Quebec தீ விபத்தில் இரண்டாவது சடலம் மீட்பு

Quebec மாகாணத்தின் Old Montreal தீ விபத்தில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தீயினால் முற்றாக சேதமடைந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் இதுவாகும்.

கடந்த வியாழக்கிழமை (16) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும் 6 பேரை தொடர்ந்து தேடி வருவதாகவும் அதிகாரிகள் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர்.

தீயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதல் நபர் 76 வயதான Camille Maheux என காவல்துறையினர் புதன்கிழமை (22) அறிவித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (21) இரண்டாவது சடலம் மீட்கப்பட்டது.

தொடர்ந்து 5 பேரை தேடி வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த தீயில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

Related posts

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment