Quebec மாகாணத்தின் Montreal வடகிழக்கில் கடந்த வாரம் பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மரணமடைந்தார்.
Montreal வடகிழக்கில் Lower St. Lawrence பகுதியில் கடந்த வாரம் திங்கட்கிழமை (13) பாதசாரிகள் மீது வாகனம் மோதிய சம்பவம் நிகழ்ந்தது.
இதில் இருவர் பலியானதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் காயமடைந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மேலும் எட்டுப் பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என Quebec City வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் வாகன சாரதியான 38 வயதான Steeve Gagnon மீது ஆபத்தாக வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலும் குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவாகும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு எதிரான அடுத்த நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.