கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) இந்த நியமனத்தை அறிவித்தார்.
ஆனாலும் கனடாவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளும் இந்த தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் ஆளுநர் நாயகத்தின் பாரபட்சமற்ற தன்மை குறித்து Conservative, Bloc Quebecois கட்சியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆனாலும் புதிய ஜனநாயகக் கட்சியினரும், வேறு சிலரும் David Johnstonனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து David Johnston அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கவுள்ளார்.
கனடாவின் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் இவரது நியமனம் அமையும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.