Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் கடமையின் போது வியாழக்கிழமை (16) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Edmonton காவல்துறை தலைவர் Dale McFee இதனை உறுதிப்படுத்தினார்.
வியாழக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஒரு தொடர் மாடி கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலியான காவல்துறை அதிகாரிகள் 35 வயதான Constable Travis Jordan, 30 வயதான Constable Brett Ryan என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த அதிகாரிகளின் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில் மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
இதில் ஒரு ஒரு ஆண் சந்தேக நபரும் இறந்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.