தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

கனடிய பொது தேர்தல்களில்  வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டார்.

பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளரை நியமிப்பதாக கடந்த வாரம் பிரதமர் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் இந்த நியமனத்தை அறிவித்தார்.

கனடாவின் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் இந்த நியமனம் அமையும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த இரண்டு தேர்தல்களில் சீனாவின் தலையீடுகள் குறித்த கனேடியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நியமன அறிவித்தல் வெளியானது.

David Johnston, பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கவுள்ளார்.

கனடாவின் 28வது ஆளுநர் நாயகமாக David Johnston 2010 முதல் 2017 வரை பதவி வகித்தவர்.

Related posts

Air Canada வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம்: தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

Lankathas Pathmanathan

September மாதத்தின் பின்னர் அதிகுறைந்த தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja

Leave a Comment