கனடியர்கள் மற்றொரு வெப்பமான கோடை காலத்தை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
2022 இல் பதிவு செய்யப்பட்ட வெப்பமான கோடை காலத்திற்கு பின்னர் கனடியர்கள் மற்றொரு வெப்பமான கோடை காலத்தை இம்முறையும் எதிர்கொள்ளவுள்ளனர்.
கனடா முழுவதும் உள்ள பெரும்பாலான பிராந்தியங்கள் கடுமையான வெப்ப நிலையை எதிர் கொள்வார்கள் என கூறப்படுகிறது.
குறிப்பாக June மாத இறுதி முதல் September ஆரம்பம் வரை சில பகுதிகளில் வெப்பநிலை 32 பாகை செல்சியஸ் வரை உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ontarioவில் அதிக ஈரப்பதத்துடன் கடுமையான வெப்பநிலை எதிர்வு கூறப்படுகிறது.
Quebecகில் சாதாரண வெப்பநிலையை விட கடுமையான வெப்ப நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
Prairies மாகாணங்களில் சராசரிக்கும் அதிகமாக மழைப் பொழிவுடன் கடுமையான வெப்ப நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
Atlantic மாகாணங்களில் வறண்ட, ஆனால் பருவகால வெப்பநிலை எதிர்வு கூறப்படுகிறது.
மத்திய கனடாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Quebec, Maritime பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும்.
இந்த எதிர்வு கூறல்கள் பூர்வாங்கமாக இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் கனடாவில் அதிகரித்து வரும் வெப்ப நிலைக்கு ஏற்ப இது இருப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.