தேசியம்
செய்திகள்

Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகல்

Ontario மாகாண Progressive Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகுகின்றார்.

Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் Vincent Ke இந்த முடிவை அறிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் இருந்து விலகி சுயேட்சை மாகாணசபை உறுப்பினராக செயல்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கனடிய பொது தேர்தல்களில் சீனாவின் தலையீட்டுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறானது. அவதூறானது என Vincent Ke மறுத்தார்.

ஒண்டறியோ மாகாண அரசாங்கத்தின் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை கட்சியில் இருந்து விலகும் தனது முடிவு குறித்து Vincent Ke தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டில் இருந்து தன்னை நிரபராதி என நிரூபிப்பதிலும் தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் தனது நேரத்தை அர்ப்பணிப்பதற்காக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக Vincent Ke கூறினார்.

அவரது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும், அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாகவும் Ontario முதல்வர் Doug Ford கூறினார்.

Vincent Ke மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்ட முதல்வர் அலுவலகம் அவை தீவிரமானவை என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை

Related posts

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்: Ontario

Gaya Raja

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan

Leave a Comment