Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, Marc Garneau அரசியலில் இருந்து விலகுகின்றார்.
Quebec மாகாணத்தின் Montreal தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 14 வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார்.
இவர் முதலில் 20228ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 முதல் 2021 வரை மத்திய போக்குவரத்து அமைச்சராகவும், 2021இல் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு பறந்த முதல் ஆறு கனடிய விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவராவார்.