Yukon பிரதேசம், Huron ஏரியின் மீது கடந்த மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள், வெளிநாட்டுடன் தொடர்புடைய எந்த அறிகுறியும் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் பாதுகாப்புக் குழுவிடம் அனிதா ஆனந்த் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
ஆனாலும் Alaska கடற்கரையில் சுட்டு வீழ்த்தப்பட்ட பொருட்கள் குறித்து, அவை மீட்கப்படாத நிலையில் ஊகம் தெரிவிக்க முடியாது என அவர் கூறினார்.
கடந்த February 10 முதல் 12ஆம் திகதிகளுக்கு இடையில், கனடாவில் மூன்று பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அமெரிக்காவில் சீன கண்காணிப்பு பலூன் சுட்டுவீழ்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் கனடாவில் பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த மூன்று பொருட்களும் கண்காணிப்பு பலூன்களாக இருக்கலாம் என, அமெரிக்க, கனேடிய அதிகாரிகள் முன்னர் சுட்டிக்காட்டினர்.