December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

யாழ்ப்பாணம் – அனலைதீவில் கனடிய தமிழர் தாக்குதலுக்கும் உள்ளான சம்பவத்தை கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் வன்மையாக கண்டித்துள்ளது.

கனடிய தமிழரான நாகலிங்கம் சுப்பிரமணியம் கடந்த வாரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அனலைதீவில் நிகழ்ந்தது.

அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நள்ளிரவு பொழுதில் உட்புகுந்த 4 பேர் அடங்கிய குழு, அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆலயத்தின் குருசுவாமியும், போசகருமான நாகலிங்கம் சுப்பிரமணியம் மீதான தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கனடிய அரசும், இலங்கை காவல்துறையும் இணைந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் வலியுறுத்தியுள்ளது

Related posts

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ; விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசிடம் வலியுறுத்தல்

Gaya Raja

British Colombia தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment