Alberta – British Colombia எல்லையில் நிகழ்ந்த பனிச்சரிவில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டார்.
புதன்கிழமை (01) பின்னிரவு நிகழ்ந்த இந்த பனிச்சரிவில் மேலும் நால்வர் காயமடைந்ததாக RCMP தெரிவித்தது.
மொத்தம் 10 பேர் இந்த பனிச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது.
பனிச்சறுக்களில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இறந்த, காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த சம்பவம் குறித்து முறையாக அறிவிக்கும் நடைமுறைகளை பாதிக்கப்பட்ட நாட்டவர்களின் தூதரகத்தின் ஊடாக முன்னெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வியாழக்கிழமை (02) தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பனிச்சரிவில் சிக்கிய மூவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.
இதுவரை 12 பேர் British Colombiaவில் இந்த பருவத்தில் பனிச்சரிவுகளில் மரணமடைந்தனர்.