கனேடிய மாகாணங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தொலைபேசிகளில் இருந்து TikTok செயலியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன.
கனடிய மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் TikTok செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
சில மாகாணங்கள் மத்திய அரசின் இந்த முடிவை பின்பற்றியுள்ளன.
ஏனைய மாகாணங்கள் TikTok செயலி தடையை அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
Quebec, Alberta, Nova Scotia, Prince Edward Island, Saskatchewan, British Colombia, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்கள் TikTok செயலியை தடை செய்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையில் TikTok செயலியை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக Ontario அரசாங்கம் தெரிவித்துள்ளது.
New Brunswick, Manitoba ஆகிய மாகாணங்களும் இந்த தடை குறித்து ஆலோசித்து வருகின்றன.
Yukon, Northwest Territories, Nunavut ஆசிய பிராந்தியங்கள் மத்திய அரசின் TikTok தடையை பின்பற்ற திட்டமிட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனாலும் சில நகராட்சிகளும் மத்திய அரசின் முடிவை பின்பற்ற முடிவு செய்துள்ளன.
Calgary, Ottawa ஆகிய நகரசபைகள் ஏற்கனவே TikTok செயலியை தடை செய்துள்ளன.