கனடிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நிறுவனங்கள் தொடர்ந்து விலைகளை அதிகரித்தால், மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
உயர் பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு உருமறைப்பு அளிக்கிறது எனவும் அவர் கூறினார்.
பணவீக்கத்தை நிறுத்த ஒரே வழி நிறுவனங்கள் விலைகளை உயர்த்துவதை நிறுத்துவதுதான் என அவர் தெரிவித்தார்.
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் January மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவானது குறிப்பிடத்தக்கது.